யாழில் மகனை கடித்துக் குதறிய தந்தை!
யாழ்.இணுவில் பகுதியில் தனது மகனை தந்தை கடித்துக் குதறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மதுபோதைக்கு அடிமையான குறித்த தந்தை (செவ்வாய்க்கிழமை) அதிக மதுபோதையில் வீட்டுக்குவந்து தனது 5 வயது மகனை கொடூரமாக கடித்துக் குதறியுள்ளார்.
அதனால் சிறுவனின் கை, முதுகு, முகம் ஆகிய பகுதிகளில் கடுமையான கடிகாயங்கள் ஏற்பட்டுள்ளன.
உறவினர்களால் மீட்கப்பட்ட சிறுவன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, தந்தையை கைதுசெய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.