வவுனியாவில் போக்குவரத்து சாரதிகளுக்கு அச்சுறுத்தலாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை.
வவுனியா தாண்டிக்குளம் ஊடாக கல்மடு செல்லும் பிரதான வீதியில் பயணிக்கும் பொதுமக்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அசமந்த போக்கினால் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
வவுனியா தாண்டிக்குளம் ஊடாக கல்மடு செல்லும் பிரதான வீதியானது வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு(RDD) சொந்தமானது
குறித்த வீதியின் அருகாமையில் தேசிய நீர்வழங்கல் அதிகாரசபையினால் வீதியின் இரு மருங்கிலும் வீதியை அகழ்ந்து அதனுள் குழாய்கள் புதைக்கப்பட்டு பணிகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் அகழ்ந்த வீதியினை மீண்டும் சரியான முறையில் செப்பனிடப்படாத நிலையில் காணப்படுகின்றது.
இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு தெரியப்படுத்தியும் இது வரையில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்