கனமழை: தமிழக பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

கனமழை: தமிழக பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

கனமழை காரணமாக திருச்சி, தஞ்சை, தருமபுரி ஆகிய மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது.

நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ,தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக 5 மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை, திருவாரூர் மாவட்ட பாடசாலை கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தஞ்சை, தர்மபுரி, திருச்சி மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். திருவாரூர், நாகை மாவட்ட பாடசாலை கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net