வவுனியா நகரசபையின் எழு நீ நிகழ்வை தமிழ் மாமன்றம் புறக்கணிப்பு.

வவுனியா நகரசபையின் எழு நீ நிகழ்வை தமிழ் மாமன்றம் புறக்கணிப்பு.

வவுனியா நகரசபையினரின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள ஏழு நீ நிகழ்வு பல கலை இலக்கிய படைப்பாளிகள் மத்தியில் பெரும் அப கீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் நிகழ்வில் மூத்த கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் விமர்சனங்களும் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் நேற்று தமது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தியதுடன் இந்நிகழ்வை புறக்கணிப்புச் செய்யவுள்ளதாக தமிழ் மணி அகளங்கள் தெரிவித்திருந்த நிலையில் இன்று வவுனியா தமிழ் மாமன்றம் தனது உத்தியோக பூர்வமான நிலைப்பாட்டினைத் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா நகரசபையினரின் எழு நீ விருதுகள் 2018 தொடர்பாக கருத்துக்களும் ,விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இது தொடர்பில் ஒரு பதிவு செய்யப்பட்ட கலை இலக்கிய மன்றமாகத் தமிழ் மாமன்றத்தின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கடப்பாடு இருக்கின்றது.

இது தொடர்பில் தமது எட்டுக் கோரிக்கையினை சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் குறித்த நிகழ்வு அதன் தன்மைக்கு மாறாக அரசியல் மயப்படுத்தப்படுவதனை அவதானித்து கவலையடைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் தமது உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் தமிழ் மாமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத வகையில் பொது நிகழ்வுகளில் அல்லது வேறு மன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வதை நாம் மதிக்கின்ற அதேவேளை அதை அவர்களுடைய உரிமையாகக்கருதுகின்றோம்.

எனவே நீ எழு பண்பாட்டு விழாவிலிருந்து தமிழ் மாமன்றம் அமைப்பு சார்ந்து நடுநிலையோடு ஒதுங்கியிருக்கின்றது என்பதையும் எமது மன்ற உறுப்பினர்கள் யாராவது பங்கேற்பின் அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பின் அடிப்படையில் சுய பங்கேற்பாகவே அமையும்.

உறுப்பினர்களின் பங்கேற்பு தமிழ் மாமன்றத்தின் மன்றம் சார்ந்த பங்களிப்பாக அமையாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளதாக அவ் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net