பாகிஸ்தானின் அழைப்பை நிராகரித்தது இந்தியா!

பாகிஸ்தானின் அழைப்பை நிராகரித்தது இந்தியா!

பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூருக்கு சீக்கியர்கள் செல்வதற்கு வசதியாக அமைக்கப்படும் புதிய வீதிக்கான தொடக்க விழாவிற்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நிராகரித்துள்ளார்.

குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரைஷி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையிலேயே தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்கும் பணி உள்ளதைக் காரணம் காட்டி இந்த அழைப்பை சுஷ்மா நிராகரித்துள்ளார்.

இது தொடர்பாக, பாகிஸ்தான் அமைச்சருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் “எங்கள் நாட்டிலுள்ள சீக்கிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் வசதியாகவும் விரைவாகவும் பாகிஸ்தானுக்கு சென்று குருத்வாரா கர்த்தார்பூர் சாஹிப் ஆலயத்தை தரிசிக்க வழி வகிக்கும் இந்த பாதையின் தொடக்க விழாவுக்கு எங்கள் நாட்டின் சார்பில் மத்திய அமைச்சர்களான ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் பூரி ஆகியோரை அனுப்பி வைக்கிறோம்” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net