பிரபாகரனின் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய யாழ் பல்கலைக் கழக மாணவர்கள்

பிரபாகரனின் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய யாழ் பல்கலைக் கழக மாணவர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளில் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.

பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்றாகும். இப் பிறந்தநாள்நிகழ்வை தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பலரும் மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நள்ளிரவு வேளையில் பிறந்த நாளை கேக் வெட்டி பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் கொண்டாடியுள்ளனர்.

இதே வேளை அவரின் இன்றைய பிறந்த நாளை முன்னிட்டு பிரபாகரனின் சிந்தனை எனக் குறிப்பிட்டு அவரின் பல சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் வகையில் பல்கலைக்கழகத்திற்குள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

மேலும் நாளை மாவீரர் தின நிகழ்வுகள் அனுஷ்டிப்பதற்குப் பல இடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற நிலையிலையே பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வும் கொண்டாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 6786 Mukadu · All rights reserved · designed by Speed IT net