மதுவால் 3 வயது குழந்தையைக் கொன்ற தந்தை!

மதுவால் 3 வயது குழந்தையைக் கொன்ற தந்தை!

நாகையில் குடிக்க பணம் தராமறுத்ததால் தந்தை செய்த வேலையில் அவரது 3 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் எனும் இடத்திவ் ரமேஷ் என்பவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. ரமேஷுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

குடிப்பதற்கு பணம் இல்லையென்றால் மனைவியிடம் சண்டையிட்டு பணத்தை வாங்கிச் செல்வது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் தனது மனைவியிடம் குடிக்க பணம் கேட்டதும், தன்னிடம் பணமில்லை என அவரது மனைவி கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த ரமேஷ் அங்கிருந்த அடுக்குப் பெட்டியை (bureau) கீழே தள்ளியதால், அவனது குழந்தை பாரம் தாங்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Copyright © 5844 Mukadu · All rights reserved · designed by Speed IT net