பொதுத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் பேரணி

பொதுத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் பேரணி

பொதுத்தேர்தலை நடத்துமாறு வலுயுறுத்தி மகிந்த ஆதரவு அணியினர் கிளிநொச்சியில் பேரணி ஒன்றை இன்று மேற்கொண்டிருந்தனர்.

இன்று காலை பத்து முப்பது மணிக்கு கிளிநொச்சி காக்கா கடை சந்தியிலிருந்து டிப்போச் சந்திவரை குறித்த பேரணி இடம்பெற்றது.

பொதுத் தேர்தலை நடத்து, சபாநாயகரே பதவி விலகு, வேண்டும் வேண்டும் மகிந்த வேண்டும், ரணிலே வெளியேறு போன்ற கோசங்களை எழுப்பியவாறு இப் பேரணி இடம்பெற்றது.

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் தர்மபால செனவிரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் இருந்து நூற்றுக்கண்க்கானவர்கள் இப் பேரணில் கலந்துகொண்டனனர்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net