கஜா புயல் பாதிப்பு – தொடர்ந்தும் உதவிக்கரம் நீட்டும் கேரளா!

கஜா புயல் பாதிப்பு – தொடர்ந்தும் உதவிக்கரம் நீட்டும் கேரளா!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் அவசர உதவிக்காக 10 கோடி ருபாய் வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பினராயி விஜயன் தமது டுவிட்டரில்,

“கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழக சகோதரர்களுக்கு கேரள மக்களின் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.

புதன் கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அவசர உதவியாக 10 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். உணவு, துணி, ஆடைகள் உள்ளிட்ட 14 லாரிகளில் அவசர பொருட்களை ஏற்கனவே அனுப்பி வைத்தோம்.

ஆறு மருத்துவ குழுவும் கேரள மின்சார வாரியத்தை சேர்ந்த 72 ஊழியர்களும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தேவை என்றால் மேலும் உதவியை அனுப்புவோம் என்று தமிழக அரசுக்கு உத்தரவாதம் அளித்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net