கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டம் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது.
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்க முன்பாக ஏ9 வீதியில் குறித்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது,
குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்து கொண்டிருந்தனர். போராட்டத்தில் ஈடபட்டவர்கள் தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை கண்டித்தும் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்.