பல ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழர்கள்! நடிகரின் கோரிக்கை!

பல ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழர்கள்! நடிகரின் கோரிக்கை!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்யுமாறு தமிழக ஆளுநரிடம், நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், பேரறிவாளன், நளினி, சாந்தன் உட்பட ஏழு பேரும் சிறை சென்று இன்றுடன் 28 ஆண்டுகள் ஆகின்றன.

இதையடுத்து டுவிட்டரில் #28YearsEnoughGovernor என்ற ஹேஷ்டேக்கின் கீழ், அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய கோரி பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

தற்போது #28YearsEnoughGovernor ஹேஷ்டேக் டுவிட்டரில் பிரபலமாகி வருகிறது. இதனை முன்னிட்டு, நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில், 7 பேரையும் மனித உரிமை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி தனது பதிவில், ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் தண்டனை விவகாரம் தமிழர்கள் பிரச்சினை சார்ந்தது மட்டுமல்ல என தெரிவித்துள்ளதுடன், மனித உரிமை அடிப்படை அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் இந்த பதிவு அனைவராலும் ரீ – ட்வீட் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net