யாழ். நெடுந்தீவில் கடற்படைக் கப்பலுடன் மோதி ஓர் படகு முழ்கியுள்ளது!

யாழ். நெடுந்தீவில் கடற்படைக் கப்பலுடன் மோதி ஓர் படகு முழ்கியுள்ளது!

இந்திய மீன்பிடிப் படகு ஓர் ஒன்று இலங்கை கடற்படைக் கப்பலுடன் மோதுண்டது தென் நெடுந்தீவில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்குச் சொந்தமான நீர்ப்பரப்பில் (வியாழக்கிழமை) சட்டவிரதோமாக மீன்பிடியில் ஈடுபட்ட சுமார் 30 படகுகளுடன் இலங்கைக் கடற்படைக் கப்பல் கூடப் பயணித்தபோதே இத்துயர நிகழ்வு இடம்பெற்றது.

இதற்க்கு படகுகளின் தடுமாற்றத்தாலும் இச் சமபவம் நடந்தபோது நிலவிய தெளிவற்ற பார்வையினாலுமே இந்த விபத்து சம்பவித்ததுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கப்பலில் இருந்த சில பொருட்களையும் 4 பேர் கொண்ட குழுவினையும் இலங்கைக் கடற்படை மீட்டுள்ளது.

இந்நிலையில் மீட்கப்பட்ட மேலும் சிலரும் அவர்கள் சென்ற பொருட்களும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net