குழந்தையை ஊஞ்சலுடன் கிணற்றில் தூக்கி எறிந்த பெண் !

குழந்தையை ஊஞ்சலுடன் கிணற்றில் தூக்கி எறிந்த பெண் !

வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜ்புரம் பகுதியில் நேற்று மதியம் 3 மணியளவில் கிணற்றிலிருந்து 8 மாத குழந்தையொன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்

குறித்த குழந்தையின் தாயார் அவரது மூத்த பிள்ளையுடன் காட்டிற்கு விறகு எடுப்பதற்காகக் குழந்தையினை அவரது மாமியின் அரவணைப்பில் விட்டுச் சென்றுள்ளனர்.

மாலை வீடு திரும்பிய தாயார் குழந்தையினை தேடிய சமயத்தில் குழந்தையினை காணவில்லை.

வீடு முழுவதும் சுற்றிப்பார்த்து விட்டு கிணற்றுக்கு அருகே சென்று பார்வையிட்ட சமயத்தில் குழந்தை கிணற்றில் சடலமாக மிதந்துள்ளது.

இதனையடுத்து புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணை முன்னெடுத்தனர்.

மாமியின் அரவணைப்பில் குழந்தை இருந்த சமயத்தில் மாமி குழந்தையினை ஊஞ்சலில் போட்டு ஊஞ்சலுடன் கிணற்றில் தூக்கி எறிந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்தமையினையடுத்து 75வயதுடைய குறித்த பெண்ணை (மாமி) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என அயலவர்கள் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Copyright © 1237 Mukadu · All rights reserved · designed by Speed IT net