கிளிநொச்சியில் 6018 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்

கிளிநொச்சியில் 6018 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர் வலயக் கல்விப் பணிப்பாளர்

கிளிநொச்சி மாவட்டத்தில் 2018 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 6018 மாணவர்கள் தோற்றுகின்றனர் என கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன்குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

2018 மாணவர்களில் 3842 பேர் பாடசாலை பரீட்சாத்திகள் எனவும் இவர்களில் 2176 மாணவர்கள் வெளிவாரியாகவும் தோற்றுகின்றனர்..

42 பரீட்சை நிலையங்கள், 10 இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவும் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திச் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை நாடாளவிய ரீதியில் ஆறு இலட்சத்து 56641 பரீட்சாத்திகள் இதில் பாடசாலை பரீட்சாத்திகள் நான்கு இலட்சத்து 22850 பேர் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

இதற்காக 4661 பரீட்சை நிலையங்களும், 541 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. என இலங்கை பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net