மீண்டும் ஐயப்பன் கோயிலுக்கு இரு பெண்கள் வந்ததால் பரபரப்பு!

மீண்டும் ஐயப்பன் கோயிலுக்கு இரு பெண்கள் வந்ததால் பரபரப்பு!

சபரிமலையில் ஆந்திரம் மாநிலத்தைச் சேர்ந்த இரு இளம் பெண் பக்தர்கள் நேற்று (சனிக்கிழமை) நுழையமுற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரித்து வருகின்றனர்.

தற்போது சபரிமலையில் மண்டல பூஜை தொடங்கியுள்ளதால் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் சபரிமலைக்கு வரும் பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர்.

இந்நிலையில் 50 வயதுக்கும் குறைவான இரு பெண் பக்தர்கள் ஆந்திராவைச் சேர்ந்த கிருபா வதி, வினோதினி ஆகியோர் நேற்று பம்பையில் இருந்து சபரிமலைக்குச் சென்றனர்.

ஒருகிலோமீற்றர் தொலைவில் இருக்கும் மரக்கூட்டம் பகுதிக்கு வந்ததும் இரு பெண்களையும் செல்ல விடாமல் போராட்டக்கார்கள் தடுத்து சரண கோஷமிட்டனர். இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பக்தர்கள் அதிக அளவில் கூடி பொலிஸாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அந்த 2 பெண்களும் திரும்பிச் சென்றனர். பம்பைக்குச் சென்ற அவர்கள் பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஒரு குண்டூர் மாவட்டம் நவோஜம்மா (வயது26) மற்றொருவர் கிரிபாவதி(42) கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

40இற்கும் மேற்பட்ட பக்தர்கள் சேர்ந்து வந்துள்ளதாகவும் அவர்கள் பம்பையில் இருப்பதாகவும் அந்த இரு பெண்களும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் பாதுகாப்புடன் பொலிஸார் பம்பைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், பெண் பக்தர்களை செல்லவிடாமல் தடுத்த மகேஷ், சுபாஷ் , சந்தோஷ் ஆகியோர்களை பொலிஸார் கைது செய்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net