வவுனியா நெடுங்கேணியில் மஹிந்தவிற்கு ஆதரவாக மக்கள் போராட்டம்

வவுனியா நெடுங்கேணியில் மஹிந்தவிற்கு ஆதரவாக மக்கள் போராட்டம்

வவுனியா நெடுங்கேணி பேருந்து நிலையத்தில் இன்று பிற்பகல் 4 மணியளவில் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்தராஜபக்சவிற்கு ஆதரவாக மக்களுக்கான உரிமையை மக்களிடம் விட்டுவிடுங்கள் , வாக்களிக்க இடமளியுங்கள் எனத் தெரிவிக்கும் பதாதையைத் தாங்கியவாறு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நெடுங்கேணி மத்திய பேருந்து நிலையத்தில் இன்று பிற்பகல் 4மணியளவில் ஒன்றிணைந்த மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் ஜக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவிற்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறும் மக்களின் ஆணையை நாங்கள் ஏற்க தயார், தேர்தலை நடாத்துவோம் எனத் தெரிவிக்கும் பதாதைகளுடன் பேருந்து நிலையத்ததைச்சுற்றி போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

இப்போராட்டத்தில் 10 இலட்சம் கையெழுத்து பெறும் நடவடிக்கையும் இடம்பெற்றது.

ஆண்கள், பெண்கள் எனப்பலரும் கலந்துகொண்ட போராட்டத்தில் முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ். எம். ரஞ்சித் கலந்துகொண்டு கொண்டிருந்தார்.

Copyright © 9615 Mukadu · All rights reserved · designed by Speed IT net