இடைக்கால தடை உத்தரவை நிராகரித்த மஹிந்த!
புதிய அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த தடை உத்தரவிற்கு எதிராக நாளை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்ய தற்போது முதல் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.