இரணைமடு குளத்தின் அபிவிருத்தி தொடர்பில் அங்கயன் இராமநாதன்

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அபிவிருத்தி தொடர்பில் அங்கயன் இராமநாதன் இன்று பார்வையிட்டார்.

இன்று மாலை 5.30 மணியளவில் இரணைமடு குளத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி மற்றம், குளத்தின் தற்போதய நிலை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்பாசண பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.சுதாகரன் அவர்களுடன் குறித்த விடயங்களை கேட்டறிந்து கொண்டதுடன், இரணைமடு குளத்தின் கீழ்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நெற்செய்கையினால் பாதிப்பு ஏற்படுமா? அவர்களிற்கான மானிய உரம் வழங்க முடியுமா என்பது தொடர்பிலும் அவர் பொறியியலாளர் மற்றும் கமநலசேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் ஆகியோருடன் அங்கு பேசியிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.

குறித்த விஜயத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அவர்,

இரணைமடு குளம் அபிவிருத்தி செய்யப்பட்டு தற்போது 34.5 அடிவரை நீர் தேக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாகவும், இரணைமடு குளத்தில் முதல் முதலாக இவ்வாறு அதிகளவான நீர் தேக்கப்பட்டுள்ளமையை குறிப்பிட்டார்.

இதுவரை காலமும் 28 அடிவரையான நீரே தேக்கப்பட்டு வந்துள்ளதாகவும், இப்போது நீர் அதிகளவில் தேக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்தார்.

இதேவேளை தற்போது குளத்திற்கு நீர் படிப்படியாக வருகை தருவதாகவும், பொறியியலாளர்கள் குளத்தை அவதானித்து வரும் நிலையில் அடுத்துவரும் நாட்களில் வெள்ளம் ஏற்படாதவாறு குளத்திலிருந்து படிப்படியாக  குளத்திற்கு ஆபத்தில்லாதவாறு நீர் வெளியேற்றப்படும் எனவும், குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் அவதானித்து வருவதாகவும் இதன்போது குறிப்பிட்டார்.

எதிர்வரும் காலங்களில் குடிநீர் மற்றும் விவசாயம் மேற்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் அவரிடம் வினவியபோது,
இந்த அபிவிருத்தியின் பின்னர் கிளிநாச்சி மாவட்டத்தில் பன்னிரெண்டு ஆயிரம் ஏக்கரிற்கு மெல் சிறுபோகம் செய்யகூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 8000 ஏக்கரே செய்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது அதிகளவான நீர் உள்ளதாகவும், விவசாயிகள் குளத்தின் நீரை பயன்படுத்தாது மழைநீரை பயன்படுத்தி செய்கை மேற்கொண்டுள்ளதால் அதிகளவான சிறுபோக செய்கை மேற்கொள்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் தொடர்பில் அவரிடம் வினவியபோது,
நான் இப்போது யாழ்ப்பாணத்தில் நிற்கின்றேன்.

இன்று கொழும்பு சென்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும், அதன் பின்னரே எவ்விடயமானாலும் முடிவெடு்க முடியும் எனவும் குறிப்பிட்ட அவர், தற்போது தடை உத்தரவு மாத்திரமே கிடைத்துள்ளது எது எவ்வாறாயினும் எமது கட்சி தலைமை எடுக்கும் முடிவினையே தானும் எடுப்பதாகவும் அவர் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net