கிளிநொச்சியில் சமாதானத்தை வலியுறுத்தி சுவரொட்டிகள்

கிளிநொச்சியில் சமாதானத்தை வலியுறுத்தி சுவரொட்டிகள்

கிளிநொச்சியில் சமாதானத்தை வலியுறுத்தி சுவரொட்டிகள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகர்ப் பகுதிகளிலும் ,விஸ்வமடு,வட்டக்கச்சி என பல இடங்களில் கையால் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது

குறித்த சுவரொட்டிகளில்,
நாட்டின் சமாதானத்தை மீறுவோர்கள் நாட்டின் துறோகிகள் ,பாதாள மற்றும் வன்முறைக் காரருக்கு இடமளிக்க வேண்டாம்,சமாதானத்தை நடைமுறைப்படுத்த ஒன்று சேருங்கள்,சமாதானத்தை மீற இடமளிக்க வேண்டாம் என்ற வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளது

இச் சுவரொட்டிகள் இனந்தெரியாதோரால் இன்று அதிகாலை வேளையில் ஒட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது

மேலும் எழுதப் பட்டுள்ள வாசகங்கள் சில வற்றில் எழுத்துப் பிழைகள் இருப்பதனால் இதன் பின்னணியில் யார் இருப்பார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Copyright © 6732 Mukadu · All rights reserved · designed by Speed IT net