ஜனாதிபதி வெட்கப்பட வேண்டும்!

ஜனாதிபதி வெட்கப்பட வேண்டும்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெட்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி தேர்தலின் போது நிறைவேற்று அதிகாரத்தை இல்லதொழிப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி இல்லாத நிறைவேற்று அதிகாரங்களையும் பயன்படுத்துகின்றார். உலகின் வேறு நாடுகளைப் போன்று இலங்கையில் அமைச்சின் செயலாளர்களைக் கொண்டு நாட்டினை நிர்வாகம் செய்ய முடியாது.

மிகவும் பலம் பொருந்திய தலைவர்களை நாம் கட்டுப்படுத்தியிருக்கின்றோம் தற்போது இருப்பவர்களை கட்டுப்படுத்துவது பெரிதல்ல. ஜனாதிபதி மைத்திரிக்காக வாக்கு கேட்டமைக்காக வெட்கப்படுகின்றேன்.

ஜனநாயகத்திற்கும் ஓர் எல்லை உண்டு, ஜனநாயக வழிகளிள் முடக்கும் போது மக்கள் போராட்டங்களை தடுக்க முடியாது. நாட்டு மக்கள் நெருக்கடி நிலையை எதிர்நோக்கி வரும் நேரத்தில் ஜனாதிபதி பிரதமர்களை தேடித் தெரிந்து தெரிவு செய்து காலத்தை விரயமாக்கிக் கொண்டு வருகின்றார்.

மிக விரைவில் இந்த அரசியல் அமைப்பு முரண்பாட்டுப் பிரச்சினைக்கு ஜனாதிபதி தீர்வு வழங்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிக்கும் வகையில் ஜனாதிபதி நடந்து கொள்ள வேண்டும்.

நீதிமன்றங்கள் தெளிவாக கூறி வரும் நிலையில் ஜனாதிபதி இவ்வாறு பிடிவாதமாக இருப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு புறம்பானது என ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net