வவுனியாவில் வேலை தேடிச் சென்ற யுவதி வீடு திரும்பவில்லை!
வவுனியாவில் நேற்றுக் காலை வேலை ஒன்றிற்குச் சென்றுவிட்டு வருவதாகத் கூறிச் சென்ற 19 வயதுடைய யுவதி ஒருவர் வீடு திரும்பவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த யுவதியின் தந்தை நேற்றிரவு 11மணியளவில் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, செட்டிகுளம் வீரபுரம் பகுதியில் வசித்து வரும் ஜெயராஜ் நிஷாந்தினி என்ற 19 வயதுடைய யுவதி ஒருவர் நேற்றுக்காலை 10 மணியளவில் வீட்டிலிருந்து வவுனியாவிற்கு வேலை தேடிச் செல்வதாகத் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததையடுத்து செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் அவரது தந்தை ஜெயராஜ் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
முறைப்பாட்டினை பெற்றுக்கொண்ட பொலிஸார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.