திருகோணமலையில் வாகன விபத்து: 4 பேர் படுகாயம்!

திருகோணமலையில் வாகன விபத்து: 4 பேர் படுகாயம்!

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதின் காரணமாக 4 பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி இன்று பயணித்த குறித்த வேன், வீதியை விட்டு விலகியமை காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 40, 29, 35 மற்றும் 33 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

வேன் சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதினால் வேன் வீதியை விட்டு விலகியுள்ளது இதன் காரணமாக இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

Copyright © 5597 Mukadu · All rights reserved · designed by Speed IT net