அதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்!

அதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்!

இந்தியாவில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் சல்மான் கான், அக்‌ஷய் குமார், தீபிகா படுகோனோ. ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், 2018ஆம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டுகளாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சல்மான் கான் இந்த ஆண்டில் 253.35 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.

சல்மான் கானைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி 228.09 கோடி ரூபாய்யில் இரண்டாவது இடத்திலும், அக்‌ஷய் குமார் 185 கோடி ரூபாய்யுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இந்தப் பட்டியலில் நடிகை தீபிகா படுகோனே 112.8 கோடி ரூபாவில் 4ஆவது இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் முதல் 5 இடங்களுக்குள் முன்னேறிய பெண் பிரபலம் என்ற பெருமை தீபிகாவுக்கு கிடைத்துள்ளது.

மேலும், ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் 66.75 கோடி ரூபாவுடன் 11ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

ரஜினிகாந்த் 50 கோடி ரூபாடன் 14ஆவது இடத்தையும், தளபதி விஜய் 30.33 கோடிகளுடன் 26ஆவது இடத்திலும், விக்ரம் 26 கோடி ரூபாய்யுடன் 29ஆவது இடத்திலும் உள்ளனர்.

சூர்யா 23.67 கோடி ரூபாவும், விஜய் சேதுபதி 23.67 கோடி ரூபாவுடன் 34ஆவது இடத்தில் இருவரும் இடம்பிடித்துள்ளனர்.

தனுஷ் 17.65 கோடியுடன் 53ஆவது இடத்திலும், டாப்சி 15.48 கோடிகளுடன் 67ஆவது இடத்திலும், நயன்தாரா 15.17 கோடிரூபாய்யுடன் 69ஆவது இடத்திலும், கமல்ஹாசன் 14.2 கோடி ரூபாய் என 71ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net