வவுனியாவில் காரில் எடுத்துச் சென்ற கஞ்சா மீட்பு: 5பேர் கைது!

வவுனியாவில் காரில் எடுத்துச் சென்ற கஞ்சா மீட்பு 5பேர் கைது!

வவுனியாவில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்ட 2கிலோ கேரள கஞ்சாவுடன் 5பேரைக் கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மெலும் தெரிவருகையில், வனனிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேவிக்கிரமவின் மேற்பார்வையில் ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ்த டி சில்வா தலைமையில் தகவல் ஒன்றின் அடிப்படையில் ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற சொகுசு காரினை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பொதி செய்யப்பட்டு மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 2கிலோ 50கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காரில் பயணித்த சோமசுந்தரம் பிரதீப் வயது 31 பரந்தன், சோதசுந்தரம் பிரதீபன் வயது 29 பரந்தன், திருவழகன் சதீஸ்குமார் வயது 18 பரந்தன், ரவீந்திரன் சதீஸ் 34வயது நிலாவெளி திருகோணமலை, தேனபந்கே அமரகீர்தி கிஷாந்த வயது 44 திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5பேரை சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்னர்.

இன்றைய தினம் அவர்களிடம் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஓமந்தைப் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net