வவுனியாவில் வாள்வெட்டு குழுக்கள் அட்டகாசம்!

வவுனியாவில் வாள்வெட்டு குழுக்கள் அட்டகாசம்!

வவுனியா – வேப்பங்குளம், 7ஆம் ஒழுங்கைக்கு முன்பாக வாள்வெட்டு குழுவொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்ததையடுத்து வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு தப்பியோட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வேப்பங்குளம் சிறுவர் இல்லத்திற்கு முன்பாக அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகே நேற்றிரவு 8.20 மணி தொடக்கம் 9.30 மணி வரை சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக வாள்வெட்டு குழுவொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டிருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் நடவடிக்கையின் காரணமாக அச்சத்தில் அவ்விடத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களை வர்த்தகர்கள் மூடிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக தமிழ் மொழி மூல முறைப்பாட்டு பிரிவுக்கு தகவல் வழங்கிய போதிலும், சுமார் ஒன்றரை மணிநேரம் கழித்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்திருந்தமை தொடர்பில் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Copyright © 8470 Mukadu · All rights reserved · designed by Speed IT net