கிளிநொச்சியில் ”மனுசத் தெரண’ இலவச மருத்துவ முகாம்!

கிளிநொச்சியில் ”மனுசத் தெரண’ இலவச மருத்துவ முகாம்! அனைவரும் பயனடையுங்கள்!

தெரண ஊடக வலயமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் ´மனுசத் தெரண´ இலவச மருத்து முகாம் எதிர்வரும் சனிக்கிழமை (08) கிளிநொச்சியில் நடைபெற உள்ளது.

கிளிநொச்சி, கந்தவளை தம்பிராசா வித்தியாலயத்தில் இந்த இலவச வைத்திய முகாம் காலை 7 மணி முதல் நடைபெற உள்ளது.

இந்த மருத்துவ முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் எதிர்வரும் சனிக்கிழமை கந்தவளை தம்பிராசா வித்தியாலயத்திற்கு வருகை தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

சிறுநீரக நோயினால் அவதியுறும் மக்களின் நன்மை கருதி தெரண ஊடக நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ´மனுசத் தெரண´ திட்டத்தின் 38 ஆவது கட்டமாக இந்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net