//anjeng வவுனியாவில் வீதிக்கு வந்த முதலையால் பதற்றம்!! | Mukadu

வவுனியாவில் வீதிக்கு வந்த முதலையால் பதற்றம்!!

வவுனியாவில் வீதிக்கு வந்த முதலையால் பதற்றம்!!

வவுனியா,நெளுக்குளம் பகுதியில் வீதிக்கு வந்த 12 அடி நீளமான முதலையால் இன்று காலை பதற்ற நிலை ஏற்பட்டது.

வவுனியா, நெளுக்குளம் பகுதியில் வசிக்கும் மக்கள் காலை வீதியில் பயணித்த போது 12 அடி நீளமான முதலை ஓன்றை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து பதற்றமடைந்த மக்கள் முதலையை விரட்ட அவ்விடத்தில் கூடிய போது முதலை வீதியோரத்தில் இருந்த சிறிய பற்றைக்குள் புகுந்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஊர்மக்கள் பொலிசாருக்கு கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை வந்த நெளுக்குளம் பொலிசார், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை வரவழைத்தனர்.

அவர்கள் முதலையை மீட்டு பாதுகாப்பான இடத்தில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net