இரணைமடு குளத்தின் 5 வான்கதவுகள் இன்று திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 5 வான்கதவுகள் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இன்று காலை 11 மணியளவில் குறித்த வான்கதவுகள் பிரதி நீர்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் சுதாகரன் அவர்களின் கண்காணிப்பில் திறந்து வைக்கப்பட்டது.

குளத்தின் மேல் பகுதியிலிருந்து வரும் அதிகளவான நீரை வெளியேற்றவும், எதிர்வரும் நாட்களில் கிடைக்க இருக்கும் மழை வீழ்ச்சியினால் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதை தடுக்கம் நோக்குடனும் இவ்வாறு கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் இன்று வான் கதவுகள் திறந்து விடப்பட்டமையால் தாழ்நிலபகுதியில் எவ்வித பாரியளவிலான பாதிபபுக்களும் ஏற்படாது எனவும், தாம் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளதாகவும் இதன்போது அவர் தெரிவித்தார்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net