ஊருக்குள் புகுந்த கழிவு நீர் – மக்கள் அவதி!

ஊருக்குள் புகுந்த கழிவு நீர் – மக்கள் அவதி!

அம்பாறை – கல்முனை, அம்மன் கோவில் மற்றும் குவாரி வீதிக்கு இடையிலான 100 மீற்றர் நீளமான குறுக்கு வீதி வடிகானுக்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்துள்ளமையால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனை நகரத்தில் வெள்ள நீரால் அவதியுற்ற மக்களின் நிலையறிந்து நியுஸ்டார் விளையாட்டு கழக அங்கத்தினர்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எஸ். ராஜன் ஆகியோர் இணைந்து சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டு, வெள்ள நீர் வழிந்தோடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் பெய்து வரும் அடைமழை காரணமாக வெள்ள நீர் வழிந்தோடிச் செல்லும் வடிகான்கள் மண்ணாலும், குப்பைகளாலும் அடைபட்டு காணப்படுகின்றமையால் குடியிருப்புகளுக்கூடாக வெள்ள நீர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net