தெல்லிப்பழையில் சாரதியின் கவனக்குறைவால் பாதசாரி உயிரிழப்பு!
மோட்டார் சைக்கிளொன்று வீதியை விட்டு விலகி பாதசாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பாதசாரி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாத்மா வீதி அலவெட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

அத்துடன் மேற்படி விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகக்காக தெல்லிப்பழை வைத்தியசலையில் வைக்கப்பட்டுள்ளது.