பொலிஸ் அதிகாரிகளின் கொலையை கண்டித்து இன்றும் ஆர்ப்பாட்டம்!
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் ஆலய முன்றலில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
‘ஆயுதக் கலாசாரத்தை ஒழிப்போம், யுத்தம் இல்லாத பூமி வேண்டும், ஒற்றுமையாம் வாழ்வோம், யுத்தம் அற்ற தேசத்தை உருவாக்குவோம், சமத்துவமாய் வாழ்வோம், பொலிஸ் எங்களைப் பாதுகாக்கிறது அவர்களை நாம் பாதுகாப்போம், அந்நிய சக்திகளை இல்லாதொழிப்போம், பயங்கரவாதம் வேண்டாம், பயங்கரவாதத்தினை இல்லாதொழித்து நல்லுறவைப் பேணுவோம், இன நல்லுறவைக் காப்போம், மீண்டும் பயங்கரவாதம் வேண்டாம்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.






ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயசுந்தரவிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கையளித்திருந்தனர்.