முல்லைத்தீவில் சீரற்ற காலநிலை! வாழ்வாதாரம் முடங்கும்!
முல்லைத்தீவில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கொக்குளாய் முகத்துவாரப் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொக்குளாய் முகத்துவராப் பகுதியில் 280 சிங்கள குடும்பங்கள் குடியமர்ந்துள்ளனர். இவர்கள் மீன்பிடித்தொழிலையே பிரதான தொழிலாக நம்பியிருக்கும் நிலையில் தற்பொழுது பெய்துவரும் பருவகால மழை காரணமாக மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் தமது தற்போதைய நெருக்கடியான நிலமையை கருத்திற்கொண்டு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.