கூட்டமைப்பின் தீர்மானம்மிக்க கூட்டம் இன்று!

கூட்டமைப்பின் தீர்மானம்மிக்க கூட்டம் இன்று!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், புதிதாக அரசாங்கம் அமைக்க ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

எனினும், நிபந்தனையற்ற ஆதரவை ஏற்றுக்கொள்ள முடியாதென கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூறியுள்ளன. இந்நிலையில், இன்றைய கூட்டத்தில் இதுகுறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.

மேலும், ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க கோரும் பிரேரணை நாளை மறுதினம் நாடாளுமன்றில் கொண்டுவரப்படவுள்ளது.

குறித்த பிரேரணைக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பாகவும் இன்று தீர்க்கமான முடிவு எட்டப்படவுள்ளது.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பற்கு ஒருபோதும் ஆதரவளிக்கப்பட மாட்டாதென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 8457 Mukadu · All rights reserved · designed by Speed IT net