பொதுமக்களின் ஒருதொகுதி காணிகள் இன்று கையளிப்பு

பொதுமக்களின் ஒருதொகுதி காணிகள் இன்று கையளிப்பு

பயங்கரவாத காலப்பகுதியில் இராணுவம் திருகோணமலை மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட காணிகளை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கவுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுர் ரோஹிந்த போகொல்லாகம தலைமையில் இது தொடர்பான வைபவம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.

கட்டிக்குளம், தோப்பூர், சூரியபுர உள்ளிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு உட்பட்ட காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத்தின் கிழக்கு கட்டளைத் தளபதி அருண ஜயசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதியின் அறிவித்தலுக்கு அமைய வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் படிப்படியா விடுவிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.

டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்குள் பெரும்பான்மையான காணிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு- கிழக்கு அபிவிருத்தி செயலணியில் உறுதியளித்ததுடன், அது குறித்து அதிகாரிகளுக்கும் கட்டளையிட்டிருந்தார்.

அதற்கமைய, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள இராணுவத்தினர் காணிகள் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி இதுவரையில் இராணுவத்தினரின் வசமிருந்த 70 ஆயிரம் ஏக்கர் காணிகள் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தனியாருக்குச் சொந்தமான இன்னும், ஆயிரத்து ஐந்நூறு ஏக்கர் காணிகளே இராணுவத்தினர் வசமுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த காணிகளும் படிப்படியாக அதன் உரிமையாளர்களிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net