யாழில் அம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி!

யாழில் அம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி!

டெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியொருவர், அம்பியூலன்ஸ் வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு சென்று பரீட்சை எழுதி செல்கிறார்.

யாழ். நகரிலுள்ள மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவியொருவரே, டெங்கு பாதிப்பின் மத்தியிலும் பரீட்சை எழுதி வருகிறார்.

இவர் திடீரென டெங்கு நோய்த்தொற்றிற்கு இலக்கானார். இதையடுத்து சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பரீட்சைக்கு தயாராகியிருந்த அந்த மாணவி, டெங்கு தொற்றால் பரீட்சை எழுதும் வாய்ப்பை கைவிட தயாராக இருக்கவில்லை.

பரீட்சை எழுதப் போவதாக கோரிக்கை விடுத்திருந்தார். அவரது உடல்நிலையை ஆராய்ந்த வைத்தியர்கள், வைத்தியசாலையில் தங்கியிருந்தபடியே பரீட்சை எழுத அனுமதித்தனர்.

இதற்காக வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அவரை பரீட்சை மண்டபத்திற்கு அழைத்து செல்வதும், பரீட்சை முடிந்ததும் மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதும் யாழ் போதனா வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 6283 Mukadu · All rights reserved · designed by Speed IT net