ரணிலுடன் இணைந்த மகிந்தவின் சகா!
முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் திலின பண்டார தென்னகோன் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அவர் கட்சியில் இணைய தீர்மானித்தார்.
நாட்டை நிலைகுலைய செய்து, கட்சிக்கும் அவ பெயரை ஏற்படுத்தி அழித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் சூழ்ச்சிக்காரணமாக, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்கள் பலர் வெறுப்படைத்துள்ளதுடன் ஐக்கிய தேசியக்கட்சி உட்பட ஜனநாயக அமைப்புகளுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த பல முக்கியஸ்தர்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.