முதல் இடத்தை பிடித்து வன்னிக்கு பெருமை சேர்த்த தமிழ் பெண்!

முதல் இடத்தை பிடித்து வன்னிக்கு பெருமை சேர்த்த தமிழ் பெண்!

வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் முதலாம் இடத்தினை பெற்று தமிழ் பெண் ஒருவர் வவுனியாவில் சாதனை படைத்துள்ளார்.

இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில் வசித்து வரும் பழனியப்பன் பிரியதர்சினி (வயது – 31) கிராம, மாவட்ட, மாகாண மட்ட தேர்வில் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் முதலாம் இடத்தினை பெற்று கொண்டுள்ளார்.

பம்மைமடு விவசாய திணைக்களத்திற்குட்பட்ட பிரிவில் இடம்பெற்ற தெரிவில் முதலாவது இடத்தினையும், மாவட்ட மட்ட ரீதியில் முதலாம் இடத்தினையும், மாகாண மட்ட தெரிவில் முதலாவது இடத்தினையும் பெற்று அகில இலங்கை ரீதியில் இடம்பெறும் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவரது வீட்டுத் வீட்டுத்தோட்டத்தில் வாழை , கப்பல் , செங்கதலி , இதரை , சாம்பல் , சீனிக்கதலி , பப்பாசி , கொய்யா , மாதுளை , பலா , சீத்தா பழம் , இலந்தை, உக்குரச , ஜம்பு , அன்னாசி , லெமன் , அர நெல்லி , நெல்லி , செரி , எலுமிச்சை, பெஷன் புறூட் , பட்டர் புறூட் , அம்பிரலங்காய் , கத்தரி , வெண்டி , பயிற்றங்காய் , அவரை , தம்பலை , பூசணி , வேம்பு , முருங்கை , கறி மிளகாய் , வெங்காயம் , சுண்டக்காய் , பீர்க்கங்காய் , பச்சை மிளகாய் , மூட்டை மிளகாய் , வானம் பார்த்த மிளகாய் , முள்ளங்கி , தக்காளி , போஞ்சி, வல்லாரை , சாரணை , சண்டி கீரை , பொன்னாங்காணி , சிவப்புப் பசளி , தக்காளிக் கீரை , அகத்தி , பச்சைப் பசளி , புளிச்சைக் கீரை , கங்குன் , கொத்துப் பசளி , முளைக் கீரை , புதினா , மல்லி இலை , மரவள்ளி (3,6 மாதம்) , உருளைக்கிழங்கு , சேமன் கிழங்கு , சீனி வாழைக் கிழங்கு , வற்றாளைக் கிழங்கு , ரம்பை ,இஞ்சி , கறிவேப்பிலை , கடுகு , மஞ்சள் , உள்ளி (வெள்ளைப் பூண்டு) , கற்பூரவள்ளி , சோற்றுக்கற்றாளை , குறிஞ்சா , தூதுவளை , பிரண்டை , குப்பைமேனி , ஆடாதோடை , வெற்றிலை , துளசி , அரத்தை , முடக்கொத்தான் . கொல்வாய் , இஞ்சி , பாம்புக் கற்றாளை , ரோஜா , சூரியகாந்தி ,

செம்பருத்தி , நித்திய கல்யாணி , அந்தி மந்தாரம் , பொட்டில் பிரஸ் , மணி பிளான்ட் , செவ்வந்தி , அந்தூரியம் , கரும்பு , வில்வம் , அரசமரம் , பாக்கு , மூங்கில் , கிளிசூரியா , வேம்பு , தென்னை , சோளம் , கோழி வளர்ப்பு, தாரா வளர்ப்பு , மீன் வளர்ப்பு , ஆடு வளர்ப்பு , நெற்பயிர்ச்செய்கை, மண்புழு திரவம் உரம் தயாரித்தல் , தேனீ வளர்ப்பு , அசோலா வளர்ப்பு , சேதனப் பசளை தயாரித்தல் , ஐடோ தாவர வளர்ப்பு , சொட்டு நீர்ப்பாசனத்தில் பயிர்ச்செய்கை , இயற்கை பூச்சி தடுப்புமுறை , தோட்டத்திற்கு பயன்படுத்தும் பசளை(இயற்கை) , கோழி எரு , மீன் தண்ணீர் , ஆட்டு உரம் , மாட்டெரு , மண்புழு உரம் , சேதனப் பசளை, தோட்டத்திற்குப் பயன்படுத்தும் கிருமி கொல்லி (நாசினி இயற்கை) , உள்ளிக் கரைசல் , சாம்பல் , மஞ்சள், வேப்பஞ்சாறு , சவர்க்காரக் கரைசல் போன்றன காணப்படுகின்றன.

தனது வளர்ச்சிப்பாதை தொடர்பாக பழனியப்பன் பிரியதர்சினி கருத்து தெரிவிக்கையில்,

நான் வீட்டுத்தோட்டத்தினை கடந்த ஒரு வருடகாலமாக சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகின்றேன். விவசாய திணைக்கள ஊழியர் ஒருவர் எனக்கு வழங்கிய உற்சாகத்தினால் தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

எங்களது வீட்டுத் தோட்டத்தில் இருப்பது முழுவதுமே இயற்கையானது. எந்தவொரு, செயற்கையான மருந்துகள், பசளைகள் எதுவுமே நாங்கள் பயன்படுத்துவதில்லை.

அகில இலங்கை ரீதியில் வெற்றியினை தனதாக்கி கொள்வதே தனது இலட்சியம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிராம அலுவலர் , சமுர்த்தி உத்தியோகத்தர் , சமுர்த்தி முகாமையாளர் , விவசாய திணைக்கள ஊழியர்கள் , பொதுமக்கள் , விவசாயிகள் என பலரும் இவ் வீட்டுத்தோட்டத்தினை பார்வையிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தனது வளர்ச்சிப்பாதை தொடர்பாக பழனியப்பன் பிரியதர்சினி கருத்து தெரிவிக்கையில்,

நான் வீட்டுத்தோட்டத்தினை கடந்த ஒரு வருடகாலமாக சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகின்றேன். விவசாய திணைக்கள ஊழியர் ஒருவர் எனக்கு வழங்கிய உற்சாகத்தினால் தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

எங்களது வீட்டுத் தோட்டத்தில் இருப்பது முழுவதுமே இயற்கையானது எந்தவொரு, செயற்கையான மருந்துகள், பசளைகள் எதுவுமே நாங்கள் பயன்படுத்துவதில்லை.

அகில இலங்கை ரீதியில் வெற்றியினை தனதாக்கி கொள்வதே தனது இலட்சியம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிராம அலுவலர் , சமுர்த்தி உத்தியோகத்தர் , சமுர்த்தி முகாமையாளர் , விவசாய திணைக்கள ஊழியர்கள் , பொதுமக்கள் , விவசாயிகள் என பலரும் இவ் வீட்டுத்தோட்டத்தினை பார்வையிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net