இந்தியாவின் தேர்தல் முடிவுகளில் மோடியின் பரிதாப நிலை!

இந்தியாவின் தேர்தல் முடிவுகளில் மோடியின் பரிதாப நிலை, ராகுலின் வெற்றி பாதை!

இந்தியாவின் சத்தீஸ்கார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசேரம் ஆகிய ஐந்து மாகாணங்களில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தல்களின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட 5 மாநில சட்டமன்றத்துக்கான இத் தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்து, காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தெலங்கானாவில் மாநில கட்சியான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, மிசோரம் மாநிலத்தில் மிசோரம் தேசிய முன்னணி ஆகியவை வெற்றி பெற்றுள்ளன.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளிலும், மத்திய பிரதேசம், மிசோரமில் நவம்பர் 28 ஆம் திகதியும் தேர்தல் நடத்தப்பட்டது.

ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 7 ஆம் திகதி வாக்குகள் பதிவானது.

இந்த நிலையில் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

மத்திய பிரதேசதம் :

230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச சட்டசபையில் ஒரு கட்சி பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்கள் தேவை. இங்கு காங்கிரஸ் 115 இடங்களிலும், பாஜக 108 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ராஜஸ்தான் :

200 தொகுதிகளில் வேட்பாளர் ஒருவர் மறைவால் 199 இடங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. பெரும்பான்மைக்கு 100 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 101 இடங்களிலும், பா.ஜ.க 73 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பகுஜன் சமாஜ் 8 தொகுதிகளையும், மற்ற கட்சிகள் 19 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன.

சத்தீஸ்கர் :

90 தொகுதிகள் உள்ளன. இங்கு காங்கிரஸ் 68 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 15 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளளன.

தெலங்கானா:

119 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 88 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் மற்ற கட்சிகள் 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

மிசோரம் :

40 தொகுதிகளைக் கொண்ட இங்கு மாநில கட்சியான மிசோரம் தேசிய முன்னணி 26 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசுக்கு 5 இடங்களும், பாஜகவுக்கு ஒரு இடமும் மற்ற கட்சிகளுக்கு 8 இடங்களும் கிடைத்துள்ளன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net