கிளிநொச்சி கிருஸ்ணர் ஆலய சித்திர தேருக்கு அச்சு வைக்கும் நிகழ்வு

சிறப்பாக இடம்பெற்றது கிளிநொச்சி கிருஸ்ணர் ஆலய சித்திர தேருக்கு அச்சு வைக்கும் நிகழ்வு

கிளிநொச்சி கிருஷ்ணர் ஆலய சித்தரதேர்ருக்கான அச்சு வைக்கும் இன்று (12) நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

கிருஸ்ணர் ஆலயத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகம் இந்த நிகழ்வினை சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர். ஆலய வரலாற்றில் முதன் முதலாக 30.6 அடி உயரத்திலும்,12 அடி தள விரிவுகொண்டதும்,14 அடி பந்தல் விரிவுடையதுமான சித்திரை தேருக்கான அச்சு வைக்கும் நிகழ்வு ஆலய பூசை வழிபாடுகளுடன் சமய பெரியார்களின் ஆசியுடனும் , கிருஸ்ணர் ஆலய பகத்தர்களின் பங்கேற்புடனும் சிற்ப்பாக இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் நல்லை ஆதின குரு முதல்வர், தெல்லிப்பளை துர்க்கா தேவி ஆலய தர்மகத்தா ஆறு திருமுருகன், கிளிநொச்சி சின்மயா மிசன் குரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், ஆலய குருக்கள், நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net