யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் இடையே மோதல்!

யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் இடையே மோதல்!

யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களிடையே மோதல், தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவம் நேற்று ( 11) இரவு கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் நான்காம் வருட மாணவர்களே, அதே பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இரண்டாம் வருட மாணவர்கள் தமக்கு மரியாதை தருவதில்லை என்ற காரணத்தை முன்வைத்தே, இரண்டாம் வருட மாணவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த மூன்று மாணவர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டாம் வருட மாணவர்களுடன் தங்கியிருந்த சக மாணவன் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Copyright © 3646 Mukadu · All rights reserved · designed by Speed IT net