வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம்!

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம்!

வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது, தாயார் வெளியில் சென்று வீடு திரும்பிய பொழுது தனது மகன் தூக்கில் சடலமாக இருப்பதை கண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

26 வயதுடைய காளியப்பன் கஜமுகன் என்ற இளைஞனே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபராவார்.

குறித்த இளைஞன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 4151 Mukadu · All rights reserved · designed by Speed IT net