உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் வவுனியாவில் பட்டாசு கொண்டாட்டம்!
வவுனியாவில் ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று (13) மாலை பட்டாசு வெடித்து மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது.
ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக நான்கரை வருடங்கள் நிறைவு பெறாமல் பாராளுமன்றத்தை ஜனாதிபதியால் கலைக்க முடியாது என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து வவுனியா கொரவப்பொத்தான வீதியில் ஐக்கிய தேசியகட்சியினர் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் கருணாதாச மற்றும் வவுனியா மாவட்ட ஐக்கியதேசியக் கட்சியின் முகாமையாளர் மற்றும் இளைஞரணி தலைவருமான எஸ்.சந்திரகுமார் ஆகியோர் தலைமையில் நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி வெளியிட்டனர்.