கரைச்சி பிரதேச சபையிடம் குப்பைகள் கோரிக்கை!

கரைச்சி பிரதேச சபையிடம் குப்பைகள் கோரிக்கை!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையிடம் குப்பைகள் கோரிக்கை விடுவது போன்று பதாதை ஒன்று குப்பைகளுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் மின்சார சபைக்கு முன்பாக காணப்பட்ட குப்பைகளுக்கு நடுவில் கரைச்சி பிரதேச சபையினரே என்னை கடந்து செல்லும் நீங்கள் என்னையும் எடுத்துச் செல்லுங்கள் என எழுதப்பட்ட பதாதை ஒன்று இன்று(13) பிற்பகல் வைக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச சபையின் கழிவகற்றல் செயற்பாடுகள் தொடர்பில் அன்மைக்காலமாக பலராலும் விமர்சிக்கப்பட்டு வந்துள்ளன.

குறிப்பாக நகரில் கூட கழிவுகளை சீராக அகற்றவில்லை குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இந்த பதாதை வைக்கப்பட்டுளளது

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net