யாழில் வங்கி முகாமையாளர் வீட்டின் மீது ஆவா குழு தாக்குதல்!
வங்கி முகாமையாளர் ஒருவர் வீட்டின் மீது ஆவா குழுவினர் தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரது காரையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
யாழ்ப்பாணம், புங்கன்குளம் பகுதியில் (12) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆவா குழுவினர் சென்று வீட்டின் கண்ணாடிகளை உடைத்து சேதமாக்கியதுடன் பல லட்சம் ரூபாய் பெறுமதியான காரையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக வங்கி முகாமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.