போலி தங்க நாணயகுற்றிகளை ஏமாற்றி விற்றவருக்கு விளக்கமறியல்

போலி தங்க நாணயகுற்றிகளை ஏமாற்றி விற்றவருக்கு விளக்கமறியல்

போலி தங்க நாணயகுற்றிகளை ஏமாற்றி 23 லட்சம் ரூபாய்க்கு விற்றவருக்கு எத்ர்வரும் 26 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது

கிளிநொச்சி விசேட பிரிவு பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினர் நடத்திய விசாரணைகளில் போலி தங்க நாணயகுற்றிகளை ஏமாற்றி விற்ற என்ற குற்றச் சாட்டில் அனுராதபுரத்தை சேர்ந்த ஒருவர் ,மற்றும் அவர் வசமிருந்த போலி தங்க நாணயகுற்றிகள் ,மூன்று லட்சம் பெறுமதியான பணம் ,அவரது கார் என்பவற்றுடன் கைது செய்து நேற்று சந்தேக நபரை சான்றுப் பொருட்களுடன் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்கவும் அடையாள அணிவகுப்பிற்கு உட்ப்படுத்தவும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்று நேற்று (2018.12.13) உத்தரவிட்டுள்ளது

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

விடுதலைப் புலிகளின் காலத்தில் பதுக்கி வைக்கப்பட்ட தங்க நாணயக் குறிகள் தன்னிடம் இருப்பதாக ஒருவரிடம் வியாபர ஒப்பந்தம் செய்யப்பட்டது பின்னர் அண்மையில் கிளிநொச்சி புகையிரத வீதியில் வைத்து இரு குழுவினரும் பணத்தைக் கொடுத்து பொருளை மாற்றி உள்ளனர் இதனை அவதானித்த பொலிஸ் விசேட குழு பொறுப்பதிகாரி சந்துரங்க தலைமையிலான குழுவினர் இவர்கள் மீது சந்தேகம் கொண்டு இலக்கங்களை குறிப்பெடுத்து விசாரணைகளை முன்னெடுத்த போதே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் மேலும் இதனுடன் சம்பந்தப்பட்ட இருவர் இருப்பதாகவும் அவரை கைதுசெய்யும் நடவடிக்கைகளில் பொலிசார் ஈடுபட்டு வருவதாகவும் அறியமுடிகிறது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net