கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 4 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றது.
கரைச்சி பிரதேச சபையின் அமர்வு இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது.

சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்ற அமர்வில் 2019ம் ஆண்டுக்கான பாதீடு வாசிக்கப்பட்டு வாக்கெடுக்கப்பட்டது.
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் 17 பேரும், ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு வாக்கும்மாக 18 வாக்குகள் ஆதரவாக கிடைத்தது.
எதிராக 14 வாக்குகள் கிடைத்தன. தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சுயேட்சை குழு ஆகியன எதிர்த்து வாக்களித்ததுடன், ஈபிடிபி நடுநிலை வகித்தது.
இதேவேளை இன்றய அமர்வில் சிறிலங்கா சுதந்திர கட்சி கலந்து கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடதக்கதாகும்.