கிளிநொச்சியில் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு
கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு இன்று (14-12-2018) பிற்பகல் 3 மணிக்கு த.தே.கூட்டமைப்பின் மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் எஸ் .கலைவாணி தலைலமயில் நடைபெற்றது.
நிகழ்வில் அருட்தந்தை வடமாகான முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் முன்னாள் வடமாகான சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை த.குருகுலராஜா கரைச்சி பச்சிலைப்பள்ளி பூநகரி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் பொதுமக்கள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்





