சங்கராபுரத்தில் 5 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி !

சங்கராபுரத்தில் 5 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி !

விழுப்புரம் – சங்கராபுரம் அருகே 5 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்ததாக சங்கராபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

7ஆம் தரத்தில் கல்வி கற்றுவரும் குறித்த மாணவிகள் விஷம் குடித்து மயங்கிய நிலையில், சிகிச்சைக்காக சங்கராபுரம் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வைத்தியசாலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சங்கராபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ் உத்தியோகஸ்தர் சிவசந்திரன் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்.

அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம், குறித்த மாணவிகள் சக மாணவரிடம் உரையாடியதை ஏனைய மாணவ, மாணவிகள் கிண்டல் செய்ததால் மாணவிகள் வி‌ஷம் குடித்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net