வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் கல்வியை தொடரும் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள்

வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் கல்வியை தொடரும் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 4.30 மணியளவில் கிளிநொச்சி திருநகர் பகுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் கலந்து கொண்டிருந்தார்.

குறித்த நிகழ்வில் 50 பாடசாலை மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அனந்தி சசிதரன் குறிப்பிடுகையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை ரணில் விக்ரமசிங்க அவர்களை பாதுகாப்பதற்கு முழு மூச்சோடு செயற்பட்டது போன்று தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளான அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயங்கள் தொடர்பிலும் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்க அவர்களின் காலத்தில் வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றம் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கிடையில் பிரிவினைகள் ஏற்படுத்தப்பட்டதே அன்றி எவ்வித அபிவிருத்திகளும் அந்த மூன்றரை ஆண்டுகளில் இடம்பெற்றிருக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பலர் வெளியேறும் வகையிலும், அவர்களிற்குள் உடைவுகளை ஏற்படுத்துவதிலுமே அவர் செயற்பட்டார்.

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை அவர்களுடன் இணைந்து செயற்படுகின்றமை தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net