வவுனியா நகரசபை செயலாளருக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ள எழு நீ சான்றிதழ்!

வவுனியா நகரசபை செயலாளருக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ள எழு நீ சான்றிதழ் கலைஞர்கள் விசனம் தெரிவிப்பு!

வவுனியா நகரசபையின் உத்தியோகபூர்வமான செயலாளர் ஒருவர் கடமைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் முகமாக அண்மையில் வவுனியா நகரசபை கலாச்சாரக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எழு நீ விருது வழங்கும் நிகழ்வில் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நற்சான்றிதழில் வவுனியா நகரசபை செயலாளர் ஒப்பம் இடவேண்டிய இடத்தில் எழு நீ பண்பாட்டு முற்றத்தின் செயலாளரான மேழிக்குமரன் கையெழுத்திட்டு கலைஞர்களையும் நகரசபையின் செயலாளருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 2ஆம் திகதி வவுனியா நகரசபையின் கலாச்சாரக்குழுவினரால் கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு செய்யப்பட்டுள்ளனர். இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட நற்சான்றிதழில் மூன்று பேருக்கு கையெழுத்து வைப்பதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒன்று எழு நீ பண்பாட்டு முற்றத்தின் தலைவர் மற்றும் நகர பிதா, நகரசபை செயலாளர் ஆகியோருக்கு கையெழுத்து இடுவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நற்சான்றிதழின் மேல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வவுனியா நகரசபை செயலாளர் கையெழுத்திடவேண்டிய பகுதியில் எழு நீ முற்றத்தின் செயலாளர் கையெழுத்திட்டு நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் ஏற்பாட்டுக்குழுவினரின் செயற்பாடுகளும் வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது நிகழ்வுகளின் பின்னரே தெரியவந்துள்ளது.

ஏற்பாட்டுக்குழுவினரின் இச் செயற்பாட்டினால் கலைஞர்கள் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் நகரசபைக்கும் நகரசபை செயலாளருக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கலைஞர்கள் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்திவருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net